ஊத்துக்கோட்டை அருகே ஆந்திரா- தமிழகத்தை இணைக்குமிடத்தில் புதிய பாலம் கட்டப்படுமா
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சத்தியவேடு சாலையில் ஆந்திரா தமிழகத்தை இணைக்கும் பாலம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சத்தியவேடு சாலையில் ஆந்திரா தமிழகத்தை இணைக்கும் பாலம் ஒன்று உள்ளது இந்த பாலம் 1954ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி, ரேணிகுண்டா, மதனப்பள்ளி, கூடூர், சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை , நாயுடுபேட்டை , காளஹஸ்திரி, வரதய்யா பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்வார்கள்.
மேலும் ஆந்திர மாநிலம் தடா அருகில் தமிழகத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது போல் ஆந்திர மாநிலம் வரதய பாளையம் செல்லும் வழியில் ஸ்ரீ சிட்டி என்ற தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் ஸ்ரீ சிட்டி தொழில் பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்கிறார்கள் . மேலும் இந்த ஸ்ரீ சிட்டியில் உள்ள கம்பெனிகளுக்கு கனரக வாகனங்களில் இரும்பு உள்ளிட்ட உதிரி பாகங்களை ஏற்றி செல்வார்கள்.
மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிராவல் மற்றும் சவுடு மண் லாரிகள் மூலம் செல்கிறது .இது போன்ற கனரக வாகனங்கள் செல்வதால் ஊத்துக்கோட்டை சத்தியவேடு ( ஆந்திரா - தமிழ்நாடு) பகுதியை இணைக்கும் பாலம் வலுவிழந்துள்ளது மேலும் 69 வருடங்களுக்கு முன்பு கட்டிய இந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: தமிழ் நாடு ஆந்திரவை இணைக்கும் பாலம் ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலையில் உள்ளது. இந்த பாலம் கட்டி சுமார் 69 ஆண்டுகள் ஆகிறது. இந்த பாலம் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாக தான் ஆந்திர மாநிலத்தில் உள்ள தடா, சூளூர் பேட்டை , நெல்லூர் போன்ற பகுதிகளுக்கு செல்வார்கள். மேலும் கனரக வாகனங்களும், ஆந்திராவில் இருந்து மணல் லாரிகளும் தமிழகத்திற்கு வருகிறது இந்த பாலம் எப்போது விழுந்து விடுமோ என்று தெரியவில்லை எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பாலத்திற்கு பதில் புதிய பாலம் கட்ட வேண்டும் என கூறினர். எனது சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு கொண்டு இந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu