திருவள்ளூர் பூங்கா நகரில் தாய் அடித்துக் கொலை: மகன்களிடம் போலீசார் விசாரணை

திருவள்ளூர் பூங்கா நகரில் தாய் அடித்துக் கொலை:  மகன்களிடம் போலீசார் விசாரணை
X

பைல் படம்

திருவள்ளூர் அருகே தாய் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது இரண்டு மகன்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

திருவள்ளூர் அருகே பூங்கா நகரில் தாய் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது இரண்டு மகன்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் ஆவாரம் பூ தெருவை சேர்ந்தவர் சேகர் மனைவி மஞ்சுளா (50). இவர்களுக்கு ராஜேஷ் (31) ரஞ்சித் (28) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷ் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். ரஞ்சித் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மகன்கள் இருவருக்கும் திருமணமானதால் மூத்த மகன் ராஜேஷ் ஆவாரம் பூ தெருவிலும் இரண்டாவது மகன் ரஞ்சித் பவளமல்லி தெருவிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தாய் மஞ்சுளாவுக்கும், 2-வது மகன் ரஞ்சித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் மஞ்சுளா மூத்த மகன் ராஜேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ரஞ்சித்தின் நண்பர் சரத் என்பவர் தொலைபேசியில் ரஞ்சித்திடம் தொடர்பு கொண்டு, அம்மா மஞ்சுளா ரத்த காயங்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரஞ்சித் மற்றும் சரத் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தாய் மஞ்சுளாவை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் மஞ்சுளாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை தேடினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. திருவள்ளூர் பூங்கா நகரில் நடைபெற்ற தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மகன்கள் ராஜேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் திருவள்ளூர் தாலுக்கா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
சாக்லேட் தான  அப்டினு அசால்ட்டா எடுக்காதீங்க..! அதனால நன்மையையும் இருக்கு.. தீமையும் இருக்கு..!