நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ
பேரம்பாக்கத்தில் எம்எல்ஏவால் துவக்கி வைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட விளை நிலங்களில் நெல் பயிரிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பல்வேறு அதிகாரிகள் அரசியல் கட்சியினரிடம் மக்கள் மனு அளித்த நிலையில் இவர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதனடிப்படையில் இன்று பேரம்பாக்கம் பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார்.
இதில் விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டும் வகையில் செயல்படும் எனவும் தெரிவித்தார். இந்த விழாவில் வேளாண்மை துறை அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu