குடிநீர் நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

குடிநீர் நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு!
X

அமைச்சர் கே என் நேரு ஆய்வு

கடல் நீர் குடிநீர் ஆக்கும் நிலையத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, காந்தி ஆய்வு செய்தனர்.

குடிநீர் ஏரிகளில் போதுமான நீர் இருப்பு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டாது. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி. கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் குடிநீர் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் இந்த நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசினார். அவர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது,

நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிறுவனத்தில் ஒப்பந்த நிறுவனம் மாறியதால் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதனை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.

மேலும் அவர், குடிநீர் ஏரிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதாகவும், 13 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளில் தற்போது 9 டிஎம்சி இருப்பு இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

தற்போது சென்னையில் நாளொன்றுக்கு 1000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரப்படுவதாகவும், அடுத்த 20 நாட்களில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வர இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திட்ட மதிப்பீடு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்விற்கு பிறகு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் நேரு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் பின்வருமாறு:

புழல் ஏரி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்றாகும். இது சென்னைக்கு அருகிலுள்ள செங்குன்றத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 1,200 மில்லியன் கன அடி.

சோழவரம் ஏரி: சோழவரம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு முக்கிய ஏரி ஆகும். இது சென்னைக்கு அருகிலுள்ள சோழவரத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 400 மில்லியன் கன அடி.

பூண்டி ஏரி: பூண்டி ஏரி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். இதன் மொத்த கொள்ளளவு 4,500 மில்லியன் கன அடி.

செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரி திருப்பெரும்புதூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். இதன் மொத்த கொள்ளளவு 2,300 மில்லியன் கன அடி.

இந்த ஏரிகள் மூலம் சென்னைக்கு ஆண்டுக்கு சுமார் 8,400 மில்லியன் கன அடி குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்த ஏரிகள் சென்னையின் குடிநீர் தேவையின் சுமார் 90%-ஐ பூர்த்தி செய்கின்றன. மீதமுள்ள 10% குடிநீர் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படுகிறது.

சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால், இந்த ஏரிகளின் நீர் இருப்பு நிலையை மேம்படுத்த சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஏரிகளின் கரையோரங்களில் மரம் செடிகளை நடுவது, ஏரிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதைத் தடுப்பது போன்றவை அடங்கும்.

சென்னையின் குடிநீர் தேவைக்கு தகுந்தவாறு இந்த ஏரிகளின் நீர் இருப்பு நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!