திருவள்ளூருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருவள்ளூருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
X

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது

திருவள்ளூருக்கு வரும் அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென செயல் வீரர்கள் கூட்டத்தில் முடிவு

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தரும் திமுக இளைஞரணி செயலாளருக்கு உற்சாக வரவேற்பளிப்பது என திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற் றினார். இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட மருத்துவ அணியில் 15 ஆண்டு காலமாக தலைவராக செயல்பட்டு வருவதாகவும், தனக்கு எந்த ஒரு தகவலும் அளிக்கப்படாதது மன வருத்தத்தை அளிக்கிறது. தங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என மருத்துவ அணி நிர்வாகி கேட்டுக் கொண்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 31-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தர இருப்பதால் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாவட்ட எல்லையான ஒண்டிக்குப்பம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இரு வண்ணக் கொடி ஏந்தி வெள்ளை சீருடை அணிந்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் , ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உற்சாக வரவேற்பளிக்க வேண்டும்.

அதேபோல் 31ம் தேதி மாலை நடைபெற உள்ள மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமை நடைபெற இருப்பதால் அந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெருந்திரளான இளைஞர்கள் வெள்ளை சீருடையில் வருகை தரவேண்டும்.

அதேபோல் வருகிற டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வெள்ளை சீருடையில் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!