திருவள்ளூர் அருகே மினி வேன் மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே மினி வேன் மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு
X

பைல் படம்.

திருவள்ளூர் அருகே மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

திருவள்ளூரை மாவட்டம், நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபதி (35), ஓட்டுநர் பணி செய்து வருபவர். நேற்று காலை சிவபதி இருசக்கர வாகனத்தில் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கோவிந்தமேடு ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சென்றபோது எதிரே வேகமாக வந்த மினிவேன் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் சிவபதி சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக உயிர்ழந்தார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மப்பேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மினி வேன் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!