மருத்துவ பயிற்சி மாணவி கற்பழித்து கொலை : மருத்துவ மாணவர்கள் போராட்டம்..!

மருத்துவ பயிற்சி மாணவி கற்பழித்து கொலை : மருத்துவ மாணவர்கள் போராட்டம்..!
X

கொல்கத்தா பயிற்சி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து விவகாரத்தில் கொல்லப்பட்ட விவகாரத்தின் நீதி கேட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி விசாரணை கேட்டு மருத்துவ பணியை புறக்கணித்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர் கூட்டமைப்புகள் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒரு மணி நேரம் மருத்துவ பணியை புறக்கணித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த போராட்டத்தில் மருத்துவக் கல்லூரிகளில் பெண் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சிபிஐ உரிய விசாரணை நடத்தி இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும், குறிப்பாக தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவ மனை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஏராளமான புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்து அவதிப்பட்டனர்.மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவைக்கு ஏற்ப அதாவது 100 காவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 39 காவலர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டு வருவதால் திருவள்ளூரில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என மருத்துவர்கள் குமுறுகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!