திருக்கண்டலம் கோவிலில் மாசி மாத தெப்பத் திருவிழா.

திருக்கண்டலம் கோவிலில் மாசி மாத தெப்பத் திருவிழா.
X

ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் தெப்பத திருவிழா

திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா கோவில் மாசி மாத தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்றுதொண்டை நாட்டில் 32-ல் 18வது திருத்தலமாக விளங்கி வருகிறது.

இங்குள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் விஜயநகர பேரரசரால் கட்டப்பட்ட இத்திருத்தலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்ததாகும்

இக்கோவிலில்17 ஆண்டு மாசி மாத மகா திருவிழாவை முன்னிட்டு கடந்த 4.தேதி சனிக்கிழமை மாலை சுந்தர விநாயகர், முருகன் வள்ளி, தெய்வான, உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்கள் திரு ஆவணங்களால் அலங்காரம் செய்து அன்று மாலை திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 5.ம் தேதி அன்று சுக்கிர வள்ளி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனை அடுத்து 6.ம் தேதி ஆலய வளாகத்தில் சிவ பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருக்கண்டலம் கிராமத்திற்கு உட்பட்ட மடவிளாகம் கிராமத்திலிருந்து பொதுமக்கள் தாய் வீட்டு சீதனமாக பல்வேறு பொருட்களை மேள தாளங்கள் முழங்க ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து சோமசுந்தரம் அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் எதிரே உள்ள திருக்குளத்தில் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த தெப்பத்தில் வைத்து சுவாமிகள் உலா வந்தன.

இந்தத் திருவிழாவை காண திருக்கண்டலம் சுற்றுப்பகுதியில் உள்ள கன்னிகைப் பேர், பூரிவாக்கம், கல்மேடு, அழிஞ்சிவாக்கம், பெரியபாளையம், மதுர வாசல், ஆரணி, மற்றும் சென்னை செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்திய வேலு, கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் மற்றும் திருக்கண்டலம் பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்