பழைய நியாய விலை கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர கோரிக்கை
சேதமடைந்துள்ள அழிஞ்சிவாக்கம் நியாயவிலைக்கடை
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 280 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மூன்று லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கட்டிடம் ஒன்று உள்ளது.
இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து மேல் தளத்தில் உள்ள கம்பிகள் துரு பிடித்து வெளியே தெரிகிறது. மேற்கூரை பழுதடைந்ததால், மழைக்காலம் வந்துவிட்டால் கடைக்குள் மழை நீர் கசிந்தும் கீழ்த்தரை ஈரப்பதம் ஏற்பட்டு கடையில் அடுக்கி வைத்திருக்கும் அரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் நனைந்து வீணாகும் அவல நிலை இருந்தது
இந்த நிலையில் நியாய விலை கட்டிடம் இல்லாத காரணத்தினால் அருகே உள்ள இசேவை மையம் கட்டடத்தில் தற்காலிகமாக நியாய விலை கடை குறிப்பிட்ட நாட்கள் மட்டும் இயங்கி வருகிறது. இ சேவை மையத்தில் நியாய விலை கடை இயங்கி வருவதால் சரிவரை கடை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரே கட்டடத்தில் இரண்டு நிர்வாகம் செயல்பட்டு வருவதால் ஏழை குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்
இதுகுறித்து அழிஞ்சிவாக்கம் பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள நியாய விலை கடை பழுதடைந்ததால் இ சேவை மையம் கட்டிடத்தில இயங்கி வருவகிறது. ஒரே இடத்தில் இரண்டு நிர்வாகம் செயல்பட்டு வருவதால் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இந்த நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. கூலி வேலை செய்யும் நாங்கள், அரசு வழங்கும் பொருட்கள் நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். பலமுறை இந்த பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்றும் ஊராட்சி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இந்த பழைய கட்டிடம் அருகே அரசு தொடக்கப்பள்ளி, மழலைகள் பயிலும் அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலகம், நூலக கட்டிடம் உள்ளிட்ட அரசு சார்ந்த கட்டிடங்கள் அருகாமலே இருப்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அதேபோல் மாணவர்கள் விடுமுறை நாட்களில் இந்த நியாய விலை கட்டிடம் அருகே தான் விளையாடு கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கட்டடம் உடைந்து கீழே விழுந்தால் பெரிய அளவில் ஆபத்து ஏற்படும்.
எனவே தற்போதாவது அரசு கவனம் செலுத்தி அழிஞ்சிவாக்கம் ஊராட்சி பழைய நியாய விலை கட்டிட அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu