அரசிதழில் ஊரையே காணோம்.. கிராம மக்கள் விஏஓ அலுவலகம் முற்றுகை
பெரியபாளையம் அருகே ஊரை காணவில்லை எனக் கூறி விஏஓ அலுவலகம் முற்றுகையிட்ட கிராம மக்கள்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்கள் ஏ, பி, சி என வகைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வடமதுரை கிராமம் என்பது எர்ணாகுப்பம் என வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 100க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்களது ஊரை காணவில்லை என குற்றம் சாட்டினர்.
ஊரின் பெயர் ஆவணங்களில் மாறியுள்ளதால் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிப்போம் எனவும், பெரிய அளவில் கிராம மக்கள் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu