திருவள்ளூர் மாவட்டத்தில் சட்ட பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழு ஆய்வு மேற்கொண்டது.
திருவள்ளுர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு சார்பாக பல்வேறு இடங்களில் பொதுகணக்கு குழு தலைவர்ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் கள ஆய்வு மேற்;கொண்டனர்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கையின்படி, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த தணிக்கை பத்திகள் குறித்து பல்வேறு துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்; நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் இக்கள ஆய்வில் ஒருங்கிணைத்து செயல்பட்டார். கழிவு மேலாண்மைத்திட்டம்;, பயோடெக்னாலஜி திட்டம் போன்ற பணிகள் குறித்து பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், மருத்துவமனை, பூண்டி நீர்த்தேக்கம், மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட, திருமழிசை கழிவுநீர் சுத்தகரிப்பு ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்து, அச்சுத்திகரிப்பு நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி வட்டம், வரதராஜபுரம் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தில், சமுதாய சாண உயிர் வாயு கலன் அமைக்கும் பணியை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். மேலும், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இவ்வாய்வுகள் மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, பொதுகணக்கு குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.காந்திராஜன் ம.சிந்தனைச்செல்வன் எஸ்.சுதர்சனம் ஒய்.பிரகாஷ் க.மாரிமுத்து ஈ.ராஜா, தி.வேல்முருகன் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu