திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை
X
திருவள்ளூர் அருகே வக்கீல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் அருகே ஈக்காடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் யோகராஜ். இவரது மனைவி அகிலா(30) சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத் துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார் .

தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அகிலா வீட்டின் அறைக்குள் சென்று அகிலா தன்னுடைய சேலை பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

காலையில் அகிலாவை குடும்பத்தினர் தேடி பின்னர் அறைக்குள் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து குடும்பத் தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!