பூண்டி ஏரியில் உபரி நீர் திறந்ததால் மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி

பூண்டி ஏரியில் உபரி நீர் திறந்ததால் மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி
X

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம்.

கொசஸ் தலை ஆற்றில் தரைப்பாலம் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் மெய்யூர்-ராஜபாளையம் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் மெய்யூர் ராஜபாளையம் ஆவாஜி பேட்டை, கல்பட்டு உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதையடுத்து பகுதி மக்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வேலை மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல மெய்யூர் ராஜபாளையம் இடையே கொசத்தலை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாளத்தை கடந்து திருவள்ளூர் பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவார்கள்.

இந்த நிலையில் தற்போது மாண்டாஸ் புயல் காரணமாக பெய்து வரும் மழையின் காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து அதில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரானது கொசுத்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலம் முழுகியது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூர அளவில் சுற்றி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் இந்த ஆற்றுப்பகுதியில் பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து அரசு ரூபாய் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த பாலப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க வேண்டும் என்று அப்பகுதியில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்த பகுதி மக்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஆனது கரை புரண்டு ஓடும்போது இவ்வழியை பயன்படுத்த முடியாமல் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் அரசியல்வாதிகளிடம் பலமுறை கோரிக்க வைத்ததை அடுத்து தரைப்பாலும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story