கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லைக்கு வந்த கிருஷ்ணா நீர்
கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லைக்கு வந்த கிருஷ்ணா நீர்
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்தது.
சென்னை மக்களின் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 2000 கன அடி நீர் நேற்று முன் தினம் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து,தமிழக எல்லையான திருவள்ளுவர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்க்கு 20 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை மக்களின் குடிநீர் அளிக்கும் முக்கிய ஏரிகளில் குறைந்த அளவில் தண்ணீர் இருப்பு இருந்து வருவதால், ஆந்திரா அரசிடம் கண்டலேறு அணையிலிருந்து 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கண்டலேறு அணையிலிருந்து ஆந்திரா அரசு முதல் கட்டமாக 2000 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. தொடர்ந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 20 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு செல்லும் கால்வாய் சீர்படுத்தும் பணிகள் நிறைவு பெறாததால் கிருஷ்ண நீரானது கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu