கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
X

 சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, கலந்து கொண்டு பேசினார்.

வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல்லில் லியோனி பங்கேற்பு

இந்தியா என கூட்டணி பெயர் வைத்ததில் இருந்து இந்தியா எந்த பெயரை பயன்ப்படுத்துவதை நிறுத்திவிட்டதாகவும், பிரதமர் மோடிதற்போது அந்த கூட்டணியை பார்த்தாலே பயம் வந்துவிட்டதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்..

வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்டம், சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பொது கூட்டம் மோரை ஊராட்சி புதிய கன்னியம்மன் நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

வில்லிவாக்கம் வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை வகித்தார். வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோ தயாளன் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:பேரறிஞர் அண்ணா மற்றும் முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் ஏராளமான பெருமை மிக்க நிகழ்வுகளை விட்டுவிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய்யான வரலாற்றை பரப்பியுள்ளார்.

பாரம்பரிய முறைகளை பின்பற்றும் பெண்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதல்வர் . இந்தியா என கூட்டணி பெயர் வைத்ததில் இருந்து இந்தியா எந்த பெயரை பயன்ப்படுத்துவதை நிறுத்திவிட்டனர். பிரதமர் மோடி தற்போது அந்த கூட்டணியை பார்த்தாலே பயப்படுகிறார் என்றார் அவர்.

இதில் மாவட்ட கவுன்சிலரும்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மானமோரை சதீஷ், மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர். திவாகரன், ஒன்றிய துணைச் செயலாளர் குணா தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai solutions for small business