ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
X

அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

பொன்னேரி அருகே கரும்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விமர்சையாக நடைபெற்றது.

பெரிய கரும்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரிய கரும்பூர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ பூமிதேவி, ஶ்ரீ நிலாதேவிசமேத ஶ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா யாக கலச பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றது.

பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாக குண்டத்தில் வைத்து சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலசங்களில் அடங்கிய புனித நீரை புரோகிதர்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவில் சுற்றி வளம் வந்து, கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து கரிய மாணிக்க பெருமாள்,

ஸ்ரீ பிரசன்னா ஆஞ்சநேயர் சுவாமி, செஞ்சு லட்சுமி தாயார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், இளநீர், பன்னீர், திருநீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்த பின்னர் பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவிற் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர். இதில் திருவள்ளூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆலயத்தின் சார்பில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் மாலையில் சுவாமி திருவிதி உலா நடைபெற்றது.

Tags

Next Story
Will AI Replace Web Developers