கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு..!

கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு..!
X

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு அணியின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு கராத்தே போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பெரியபாளையத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-வது தொடக்க பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கராத்தே போட்டி பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,இதில், தமிழகத்தைச் சேர்ந்த 250 வீரர்கள்,ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 200 வீரர்கள் என மொத்தம் 450 மாணவி,மாணவர்கள் கலந்து கொண்டனர். மாஸ்டர்கள் எம்.தெய்வசிகாமணி மற்றும் சி.ரமேஷ் ஆகியோர் தலைமையில் 80 பேர் கலந்து கொண்ட நடுவர்கள் இப்போட்டியை நடத்தினர்.


இதில்,60 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.மாலை 4 மணிக்கு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆ.சத்தியவேலு,நா.செல்வசேகரன்,பேரூர் செயலாளர் பி.முத்து,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் கே.ராஜேஷ், மாவட்ட துணை அமைப்பாளர் கராத்தே ஆர்.கே.தினகரன் ஆகியோர் வரவேற்றனர்.

இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராசன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசு,பதக்கங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில்,மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் என்.வில்சன், ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோல்டு மணிகண்டன்,பெரியபாளையம் வழக்கறிஞர் சீனிவாசன்,மொய்தீன்பாய்,

ஐ.ஏழுமலை,வடமதுரை அப்புன்,பார்த்தீபன், ஆத்துப்பாக்கம் வேலு,செல்வம்,லோகநாதன், மகளிர் அணியை சேர்ந்த காமாட்சி,நளாயினி, சுந்தரிஅன்பு,சரண்யா, நிர்மலா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!