திருவள்ளூரில் நகைக்கடை வியாபாரி தாக்கி நகை பணம் கொள்ளை

திருவள்ளூரில் நகைக்கடை வியாபாரி தாக்கி நகை பணம் கொள்ளை
X

நகை கடையில் வியாபாரியிடம் கத்திய காட்டி நகை பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் கைதான நபர்

திருவள்ளூரில் நகைக்கடை வியாபாரியைத் தாக்கி நகை பணம் கொள்ளைடித்தவர்களை நீண்ட தூரம் துரத்திச்சென்று போலீசார் கைது செய்தனர்

நகை கடையில் வியாபாரியிடம் கத்திய காட்டி நகை பணம் கொள்ளையடித்த சற்று நேரத்தில் போலீசார் விரட்டி பிடித்து நகை பணத்தை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் நகை வியாபாரியை கத்தியால் தாக்கி ஒரு கிலோ தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்ற காவல் துறையினரின் துரிதமான நடவடிக்கையால் 2 பேரை கைது செய்து நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேஷாராம்(25), நகை வியாபாரியான இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நகை கடைகளுக்கு நகைகளை கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டு செல்வது வழக்கமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து நகை வியாபாரம் முடித்து கொண்டு தமது இரு சக்கர வாகனத்தின் உள்ளே நகை, பணத்தை வைத்து கொண்டு சென்னை சென்ற போது தொழுவூர் என்ற பகுதியில் அவரது இரு சக்கர வாகனத்தை 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து கத்தியால் இடுப்பில் குத்தியும், வலது கையை வெட்டியும், நகை, பணத்துடன் இரு சக்கர வாகனத்தை பறித்துள்ளது.

ஆனால், வியாபாரி சேஷராம், தமது இரு சக்கர வாகனத்தின் சாவி எடுத்து கொண்டதால் கொள்ளையர்கள் வந்த வண்டியுடன் இந்த வண்டியை 'டோ' செய்து சென்றதாக தெரிகிறது. அப்போது செவ்வாய்பேட்டை சுடுகாடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செவ்வாய்ப் பேட்டை காவல் துறையினர், செய்யப்பட்ட அந்த வாகனத்தை மடக்கி விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் இரு சக்கர வாகனத்தை திறந்து பார்த்த போது அதில் ஒரு கிலோ தங்கம், 5 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது.

இதனைடுத்து அவர்களை பிடிக்க முற்பட்டபோது, 3 இரு சக்க வாகனங்களில் அவர்கள் தப்பி சென்றனர். எனினும், அவர்களை தொடர்ந்து இடைவிடாமல், காவல் துறையினர் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை துரத்தி சென்று 2 பேரை மடக்கி பிடித்தனர்.மற்றவர்கள் தப்பி சென்றுள்ளனர். இதனிடையே காயமடைந்த சேஷாராமை மீட்ட செவ்வாய்பேட்டை காவல் துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதிக்காடு பகுதியை சேர்ந்த ஆதித்யா(19). மற்றும் சரவணன்(21) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தப்பியோடிய முகேஷ்(24), நாகராஜ்(23), விஜய்(24). உள்ளிட்டோரை செவ்வாய்பேட்டை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நகை வியாபாரியை கத்தியால் தாக்கி நகை, பணம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags

Next Story
ai solutions for small business