ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி

ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி
X
ஊத்துக்கோட்டை தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றனர்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில். 1432 - ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார்.

துணை ஆட்சியர் சுபலட்சுமி , ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி , தனி தாசில்தார் லதா, ஒன்றிய எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி , பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர், பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி ஜான், ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜமாபந்தியின் முதல் நாளான நேற்று ஊத்துக்கோட்டை , தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சியகரம், பேரண்டூர், பனப்பாக்கம் , சென்னங்காரணை, தொளவேடு, தண்டலம், பருத்திமேனி, தும்பாக்கம் , காக்கவாக்கம் ஆகிய 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா 30, பட்டா மாற்றம் 48 பேரும், இதர மனுக்கள் 28 பேர் என 106 மனுக்களை வழங்கினர் . இதில் 5 மனுக்கள் ஏற்க்கப்பட்டு மீதமுள்ள 101 மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் டில்லிராணி, உதவி இயக்குனர் குமரவேல் , வட்ட வழங்கல் அலுவலர் ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் தலைமை எழுத்தர் ஹேமகுமார் நன்றி கூறினார்.

Tags

Next Story