சர்வதேச கராத்தே போட்டி : திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் வெற்றி..!

சர்வதேச  கராத்தே போட்டி : திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் வெற்றி..!
X

கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் 

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

மலேசியாவில் நடைபெற்ற இண்டர் நேஷ்னல் கராத்தே போட்டியில் திருவள்ளூர் பகுதி சேர்ந்த பள்ளி மாணவர்கள் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளி வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.கடந்த மாதம் ஜூன் 27,28,29,30, ஆகிய நான்கு நாட்கள் மலேசியாவில் அமைந்துள்ள கோலாலம்பூர் ஹென்னையூடிடிவாங்கிசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இண்டர் நேஷ்னல் கராத்தே

போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர்.இதில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் கராத்த மாஸ்டர், மற்றும் சென்னை தமிழ் திரைப்பட குரூப்ஸ் பைட்டர்ருமான தேசிய நடுவர் ஸ்ரீதர், தலைமையில்4 மாணவர்கள் பங்கு பெற்று போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

இதில் முதல் பரிசுசர்வேஷ்வான்- கோல்டு மெடல் - ஜெய்மாருதி வித்யாலயா பள்ளி திருப்பாச்சூர்,இரண்டாம் பரிசு,சத்ரபதி, அரசு பள்ளி, விடையூர்,ந ரேண்குமார்,ஜோசப் பள்ளி, டி.எம்.ஐபோளிவாக்கம்,திருசெல்வன்,மேரிஸ் பள்ளி, ஸ்ரீபெருமந்துர், ஆகிய மாணவர்களுக்கு மலேசிய நாட்டின்விளையாட்டுத்துறை அமைச்சர்,என்னையோ,அவர்கள் தங்க மெடல் மற்றும் வெள்ளி மெடலைவழங்கி பாராட்டு தெரிவித்தார்.மேலும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து மலேசியா நாட்டிற்கு சென்று போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தங்கம் மற்றும் சில்வர் மெடல் வாங்கி தமிழகத்திற்கு

பெருமை சேர்த்து உள்ள மாணவர்களை பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிகழ்வில்:மாஸ்டர் சண்முகம்,கரிகாலன், முருகன்,சரவண பாண்டியன்,கலையரசன் ஆகியோர்வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!