திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கினார்..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கினார்..!
X

திருவள்ளூரில் தேசிய கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

நாட்டின் 78-வது சுதந்திரதின விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தேசிய கொடியேற்றி வைத்து 20 பேருக்கு ரூ.65 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பின்னர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை வலியுறுத்தும் வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டு திறந்த ஜீப்பில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் தலைமையிலான காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


இதனை தொடர்ந்து, பின்னர் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் 20 பேருக்கு ரூ.65, லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளை சார்ந்த 37 முதல்நிலை அரசு அலுவலர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 412 காவல் துறை மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், விருதுகளையும் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்,மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ராஜ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!