திருவள்ளூரில் இலைக்கருகல் நோயால் நெற் பயிர்கள் பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை

திருவள்ளூரில் இலைக்கருகல் நோயால் நெற் பயிர்கள் பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை
X

திருவள்ளூர் மாவட்டத்தில் நெற் பயிர்கள் இலை கருகல் நோய் தாக்கப்பட்டதை நேரில் சென்று வேளாண் அதிகாரிகள்  பார்வையிட்டனர்.

திருவள்ளூரில இலைக்கருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதை வேளாண் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெல் பயிருக்கு இலைக்கருகல் நோய் தாக்கி சேதமடைந்ததை தொடர்ந்து திரூர் வேளாண் அறிவியல் கல்லூரியில் இருந்து பேராசிரியர், இணைப்பேராசிரியர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

திருவலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னத்தூர், மாமண்டூர், அருகன்குளம், நாகலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 150 க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிட்டு வந்தனர்.

திடீரென இலைக்கருகல் நோய் தாக்கியதாக வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகளின் மணிமேகலை தலைமையிலான குழுவினர் குன்னத்தூர் கிராமத்தில் நேரில் வந்து விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.

அப்போது நெற்பயிர்களின் இலைகளில் பூச்சி தாக்கி இருந்ததைக் கண்டறிந்தனர். இது பாக்டீரியா இல்லை, இலைக்கருகல் நோய் என பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்.

பின் பேராசிரியர்கள் விவசாயிகளிடம் பயிருக்கு என்ன உரம் போட்டீர்கள், பூச்சி மருந்து அடித்தீர்கள் என கேட்டறிந்தனர்.

இதையடுத்து விவசாயிகள் வேளாண் அதிகாரிகள் இந்த பேக்டீரியா கருகல் நோயை கட்டுப்படுத்துவதற்கு பிளான் மைசின் 120 கிராம், கார்பன் ஆக்சைடு க்ளோரைடு 500 கிராம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலையில் தெளிக்க வேண்டும்.

மழை வரும்போது தெளிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அதிகமாக இருந்தால் 15 நாட்களுக்கு பிறகு பூச்சி மருந்து அடிக்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!