மனைவி பிரிந்த சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட கணவர்

Suicide News | Drinking Poison
X

பைல் படம்.

Suicide News - கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்த சோகத்தில் விஷம் அருந்தி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Suicide News -திருவள்ளூர் அடுத்த நத்தமேடு கம்பர் தெருவில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ் (54). இவருடன் ஏற்ப்ட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் மனைவி மற்றும் மகன் பிரிந்து தனியாகச் சென்று வசித்து வருகின்றனர் . இந்நிலையில் மனைவி மகன் பிரிந்து சென்ற பின்னர் சுந்தர்ராஜன், மட்டும் தனியே வசித்து வந்தார். மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மகனை பிரிந்த துக்கத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!