தனியார் கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கல்

தனியார் கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கல்
X

திருவள்ளூரில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி

திருவள்ளூர் அருகே தனியார் கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை அடுத்த காவிரி ராஜபேட்டை கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவரது கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக வீடியோ வைரலானது.

கோவிந்தராஜ் என்பவரது மகள் சிவகாமி என்பவர் பொதட்டூர்பேட்டை அடுத்த நடுத்தெரு நியாய விலைக் கடையில் காசாளராக வேலை செய்து வருவதாகவும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச ரேஷன் அரிசியை ரேஷன் கடை ஊழியரே ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருக்கிறாரா? அல்லது வேறு யாரேனும் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறாரா? அரசின் முத்திரையுடன் கோனிப் பைகளில் ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என பொது மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் ரேஷன் அரிசி பதுக்கல் குறித்து தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!