முன்னாள் எம்எல்ஏ வேணு உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அஞ்சலி

முன்னாள் எம்எல்ஏ வேணு உடலுக்கு  முதலமைச்சர்  ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அஞ்சலி
X
திமுக வின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் 2 முறை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ ஆகவும் இருந்தவர்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டிக்கு வேணு காலமானார் அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கும்மிடிப்பூண்டி கி. வேணு. இவருக்கு மனைவி பத்மாவதி, ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் பனப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.திமுகவின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும், இரண்டு முறை கும்மிடிப்பூண்டி சட்டமன்றதொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட கும்மிடிப்பூண்டி கி.வேணு, அதன் பின்னர் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது இவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டு மீண்டும் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10 மணி அளவில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இவரது இல்லத்தில் வைக்கபட்டுள்ள பூத உடலுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் வந்து வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, காந்தி, முன்னாள் அமைச்சர் ஆவடி.சாமு. நாசர்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதேபோல் டி.ஆர். பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், பொன்னேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுநியம்.பி. பலராமன், உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.




Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி