கிராமசபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்..!

கிராமசபை  கூட்டத்தில் கூச்சல் குழப்பம்..!
X

சுதந்திர தினத்தையொட்டி நடந்த கிராமசபை கூட்டம்.

வடமதுரை ஊராட்சியை மூன்று ஊராட்சிகளாக பிரிக்க கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தபோது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வடமதுரை ஊராட்சியை பிரித்து தனி ஊராட்சியாக உருவாக்கி தர கிராமசப கூட்டத்தில் மக்கள் மனு அளித்த போது வாக்குவாதம் கூச்சல் குழப்பம்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 53 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.இதில் ஒரு பகுதியாக வடமதுரை ஊராட்சியில் கீழ் மாளிகைபட்டு, செங்காத்தாகுளம், ஸ்ரீ ராமாபுரம் கண்டிகை, எம்.டி.சி. நகர், எர்னாகுப்பம், மல்லிங்குப்பம்,முஸ்லிம் பாளையம்,பேட்டைமேடு, உள்ளிட்ட கிராமங்கள் அடங்கியது தான் வடமதுரை ஊராட்சி.

இந்த ஊராட்சியில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மூன்று வருவாய் கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியை பிரித்து மூன்று ஊராட்சிகளாக உருவாக்கி தருமாறு இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருவதோடு இது சம்பந்தமாக பலமுறை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களையும், சந்தித்தும் ஊராட்சி நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.


இந்த நிலையில் இன்று 78 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வடமதுரை ஊராட்சி கிராம சபை கூட்டமானது ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி தலைவர் காயத்ரி கோதண்டன் தலைமையில் நடைபெற்றது.அப்போது செங்காத்தா குளம்,கீழ் மாளிகை பட்டு, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுக்கு ஊராட்சியை பிரிவினை செய்து தனி ஊராட்சியாக உருவாக்கி தர வேண்டும் என கிராமசப கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டனிடம் மனு அளித்தபோது மக்கள் அளித்த மனுவின் மீது தீர்மான புத்தகத்திலும் ஏற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக ஒரு பகுதி மக்கள் ஊராட்சியினியை பிரிக்கக் கூடாது என்றும், மற்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் இருப்பதினால் தாங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் எளிதாக கிடைக்கும் என்றும் கூறி வாக்குவாதம் முற்றி கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்

இது குறித்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் இது சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டது. இதேபோல் வெங்கல் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தனியார் அறக்கட்டளையினர் கலந்து கொண்டு வெங்கல் பஜார் பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை மனுவை அளித்தனர்.

முன்னதாக ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன் ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சேர்த்துப்பாக்கம் ஊராட்சி கிராம சபை அருகே பள்ளி அருகே ஊராட்சி மன்ற தலைவர் முரளி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர், கிராம பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் செங்கல் சூலை செயல்பட்டு வருகிறது இந்த சூலையில் ஊராட்சிக்கு சொந்தமான 6.ஏக்கர் அரசு அனாதீனம் நிலத்தை செங்கல் சிங்கிள் தயாரிக்கும் நிர்வாகம் அந்த இடத்தை ஆக்கிரமித்து சுற்று சுவர் அமைத்து அந்த இடத்தில் செங்கற்களை தயாரிக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலத்தை மீட்டு தரக்கோரி 5.முறை ஊராட்சி தலைவர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடமும் இணையதள வழி மூலம்3 முறை மனு அளிக்கப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சிலர் ஊராட்சியில் இளைஞர்களுக்கு விளையாட தேவையான விளையாட்டு மைதானம் இல்லை என்றும், அந்த இடத்தை மீட்டு கிராம இளைஞர்கள் விளையாட விளையாட்டு மைதானத்தை உருவாக்கி தரவேண்டும் பொதுமக்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனுவின் மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் நம்பாலீஸ்வரர் ஆலயம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இதில் துணைத் தலைவர் மகேஷ், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.மாம்பள்ளம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மருத்துவ முகாம் நடந்தது இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இது துணைத் தலைவர் சரிதா தட்சிணாமூர்த்தி வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். கன்னிகைப்பேர் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணைத் தலைவர் மேனகா பிரேம் ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயலட்சுமி குமார், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பொன்னரசு நன்றி கூறினார். ஆலப்பாக்கம் கிராம சபா கூட்டம் அதன் தலைவர் பிரமிளா ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில் துணைத் தலைவர் செல்வம் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!