/* */

திருவள்ளூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள்.

காந்தி ஜெயந்தி முன்னிட்டு எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள்.
X

பெரியபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அதன் தலைவர் லட்சுமி திருமலை தலைமையில் நடைபெற்றது.

இதில் ஊராட்சி துணைத் தலைவர் மகேஷ்,வார்டு உறுப்பினர் பவானி ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆகியர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரியபாளையம் அம்பேத்கர் நகர் சுடுகாடு சீரமைத்து சாலை அமைத்து கல்வெட்டு அமைக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

இதே போல் வடமதுரை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் பேட்டை மேடு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனா அப்புன், துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ், வார்டு உறுப்பினர் திவ்யா ராஜீவ் காந்தி, தாமரைக்கனி தமிழ் மன்னன், ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலர் நரசிம்மன் நன்றி கூறினார்.

வடமதுரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

82.பனப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பி.முரளிதரன் தலைமையில் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. துணைத் தலைவர் பேபி ஞானபிரகாஷ், ஊராட்சி செயலர் குமரவேல் ஆகிய கலந்து கொண்டு இக்கூட்டத்தில் அரசு திட்ட பணிகளை குறித்து, ஊராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதன் தலைவர் பிரமிளா ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் மோகன், கண்ணம்மாள், ஹரிபாபு, ஜமுனா, கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

கன்னிகைப்பேர் ஊராட்சி கிராம சபை கூட்டம் மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் மேனகா சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், உமா வினோத், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பொன்னரசு நன்றி தெரிவித்தார்.

வெங்கல் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சித் தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமையில் வெங்கல் குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் கணபதி, ஊராட்சி செயலர் உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முழு சுகாதாரம் வெங்கல் குப்பம் கிராமத்தில் பொது கழிப்பிட கட்டிடம், பள்ளி மாணவர்கள் விளையாட விளையாட்டு மைதானம் வீடு தோறும் கழிப்பிட கட்டிடம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கிராமசப கூட்டத்தில் வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி தலைவர் கூட்டத்தில் உறுதி அளித்தார்.

திருக்கண்டலம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ரவி, ஊராட்சித் துணைத் தலைவர் லிங்கதுரை, ஊராட்சி செயலர் உமாநாத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தாமரைப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் கீதா துளசிராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் தமிழரசன், ஊராட்சி செயலர் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் ஊராட்சியில் மக்கள் தொகை சுமார் 10,000 மேற்பட்ட இருப்பதால் கூடுதல் ரேஷன் கடைகளை அமைக்க வேண்டும், ஊராட்சியில் உள்ள இரண்டு தாங்கள் பகுதியில் தூர்வார வேண்டும், ஊராட்சியில் உள்ள ராகவேந்திரா நகர், தாமரைப்பாக்கம் கிராமம், அம்மணம் பாக்கம் தமிழ் காலனி, சீனிவாசா நகர், பூசலை மேடு உள்ளிட்ட பகுதிகளில் வெகு நாட்களாக சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும், எனவே மேற்கொண்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஒன்றியத்தில் நடைபெற்ற அனைத்து ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் முன்னதாக அமைக்கப்பட்ட தொலைக்காட்சியில் தமிழ்நாடு அரசு அறிவித்த முத்தான ஐந்து திட்டங்களை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய காணொளியை ஒளிபரப்பு செய்து காண்பித்தனர்.

Updated On: 2 Oct 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்