பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதி வண்டிகள்: எம் எல் ஏ வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதி வண்டிகள்: எம் எல் ஏ வழங்கல்
X

பைல் படம்

எத்தகைய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் கல்வி கற்பதை மட்டும் கைவிட்டு விடக்கூடாது. என்றார் எம்எல்ஏ ராஜேந்திரன்

திருவள்ளூர் பகுதியில் உள்ள (டி,ஆர்,பி,சிசிசி) அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 140 மாணவர்கள் 165 மாணவிகள் என 305 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி, ராஜேந்திரன் வழங்கினார்.

பின்னர் மாணவர்களிடையே பேசியதாவது: கல்வி மட்டுமே காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம். மாணவர்களின் கல்வி மட்டுமே அவர்களிடமிருந்து பறிக்க முடியாத சொத்து என்பதை.அடிக்கடி தமிழக முதல்வர் சுட்டிக்காட்டி வருகிறார்.

மாணவ மாணவிகள் சைக்கிளை படிப்பிற்காக பயன்படுத்த வேண்டுமோ தவிர அதை விற்பனை செய்யக்கூடாது. செல்போனை அளவாக மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.நான் 8 -ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு என்னுடைய தந்தை ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார் அதன் மூலம் தினந்தோறும் நான் பள்ளிக்கு சென்று வந்தேன். நான் நன்கு படித்து முன்னேறி நான் சொந்தமாக கல்லூரி கட்டியது போல நீங்கள் அனைவரும் நன்கு படித்து என்னை போல் முன்னேற வேண்டும்.

கல்வி மட்டும் தான் மனிதனை சிறந்த மனிதனாக உருவாக்கும். எத்தகைய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் கல்வி கற்பதை மட்டும் கைவிட்டு விடக்கூடாது. தங்களை படிக்க வைக்கும் பெற்றோர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது என்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் பேசினார்.

இந்த நிகழ்வில் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், தலைமையாசிரியர் கலைச்செல்வன், நகர் மன்ற உறுப்பினர் நீலாவதி பன்னீர்செல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai solutions for small business