பட்டரைபெரும்புதூரில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது, தாசில்தார் தகவல்

பட்டரைபெரும்புதூரில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது, தாசில்தார் தகவல்
X

பட்டரைபெரும்புதூரில் ரூ   50  லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்டதாக தாசில்தார் தெரிவித்தார்.

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, குடிசை போட்டு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதை தொடர்ந்து இன்று திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கௌதமன், கிராம நிர்வாக அலுவலர் மதன் குமார் ஆகியோர் பட்டறைபெரும்புதூர் பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த குடிசையை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நபர்கள் தாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வரும் இடத்தை அப்புறப்படத்த கூடாது எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை முழுவதுமாக இடித்து அகற்றி அந்த இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 50லட்சம் இருக்குமென வட்டாட்சியர் செந்தில் குமார் தெரிவித்தார்.

Tags

Next Story