பெண்கள் கட்டாயம் ஐஏஎஸ் படிக்க வேண்டும்

பெண்கள்  கட்டாயம் ஐஏஎஸ்  படிக்க வேண்டும்
X

 பெண்கள் கட்டாயமாக ஐஏஎஸ் படிக்க வேண்டும் என முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி பேச்சு

திருவள்ளூர் அருகே பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி முன்னாள் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி இவ்வாறு பேசினார்

திருவள்ளூர் அருகே பெண்கள் கட்டாயமாக ஐஏஎஸ் படிக்க வேண்டும் என முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் அமைந்துள்ள விஷ்வசேனா பள்ளி ஆடிட்டோரி யத்தில் ஐஏஎஸ் அகாடமி தொடக்க விழாயவனது சிறப்பான முறையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்விக் குழுமத்தின் தலைவர் சி.பி.மூவேந்தன்தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒய்வு பெற்ற தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.ஸ்ரீபதி கூறியதாவது: ஐ.ஏ.எஸ்.படிப்பு என்பது பெரும்பாலும் தமிழக பெண்களுக்கு கனவாகவே இருந்து வருகிறது.சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருவதாகவும், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள பெண்கள் பிளஸ். 2 அல்லது ஏதேனும் ஒரு கல்லூரி படிப்பு படிக்கின்றனர். இருப்பினும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு அது முடியாமல் போகிறது.

இந்நிலையில் சின்மயா அகாடமி சிவில் சர்வீசஸ் மற்றும் விஷ்வசேனா கல்விக் குழுமம் சார்பில் ஐஏஎஸ் அகாடமி தொடங்கி இருப்பதால் கிராமப் புற பெண்களும் படித்து பயன் பெறலாம். மேலும் ,நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படும் என்றார் அவர்.




Tags

Next Story
2025 ஆம் ஆண்டில் ஏர்போட்ஸ் ப்ரோ 3வது தலைமுறைக்கான ஆப்பிள் அறிமுகப்படுத்துமா...? ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது....!