/* */

பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து பாடல்: கானா பாடகர் சரவெடி சரண் கைது

பெண் குழந்தைகளை பற்றி ஆபாசமாக சித்தரித்து பாடல் பாடிய கானா பாடகர் சரவெடி சரணை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து பாடல்: கானா பாடகர் சரவெடி சரண் கைது
X

கானா பாடகர் சரவெடி சரண் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரம்பூர் அடுத்த செம்பியம் பகுதியை சேர்ந்த பிரபல கானா பாடகர் சரவணன் என்கிற சரவெடி சரண் என்பவர் டோனி ராக் எ போட்டி கானா என்ற பெயரில் ஒரு வீடியோ 2020 மார்ச் மாதம் வெளியாகியிருக்கிறது. அதில் சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள் பாடல் பாடுகின்றனர்.

குருவிக் கூடு மண்டையுடன் சரவெடி சரண் பாடும் பாடலில் உள்ள வரிகள், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கிறது. "மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி (சிறுமி)… பால்வாடியில வாங்கி கொடுத்தேன் பூந்திய, எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்தியை." என பாடியுள்ள பாடலை தனது யூடியூப் பதிவேற்றம் செய்து இருந்தார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்து இருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் பார்த்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவரின் உத்தரவின்பேரில் கானா பாடகர் சரவெடி சரண் சைபர்கிரைம் காவல்துறையினர் சென்னையில் அவரை கைது செய்து திருவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாக சித்தரிக்கும் வீடியோ பரப்புவதால் அவர் மீது 67b தொழில்நுட்ப பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கி எச்சரித்து செய்து மன்னிப்பு கடிதம் பெற்று காவல் நிலைய பிணையில் அவரை விடுவித்தார்.

தான் பாடிய பாடல் யார் மனதும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கானா பாடகர் சரவெடி சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவின் படி சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்க தூண்டுபவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம். என மாவட்ட எஸ்.பி.வருண்குமார் எச்சரித்துள்ளார்.

Updated On: 24 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  2. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  3. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  5. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  6. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  7. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  8. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  9. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...
  10. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!