ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோயிலில் கருட சேவை

ஸ்ரீ வைத்திய வீரராகவர்  பெருமாள் கோயிலில் கருட சேவை
X
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், ஏப்ரல் 26ம் தேதி துவங்கியது.

திருவள்ளூர், ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 26ம் தேதி துவங்கியது. தினமும், காலை, மாலை உற்சவர், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக, உற்சவர் வீரராகவர் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக அதிகாலை 4: 00 மணிக்கு வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, அதிகாலை 5: 30 மணிக்கு திருவீதியுலா வந்தார்.

மதியம் திருமஞ்சனமும், மாலை ஹனுமந்த வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 29தேதி அன்று சேஷ வாகனமும், மாலை சந்திரபிரபையும் நடைபெற்றது மேலும், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்..

திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவ ஸ்வாமி கோயில் சிறப்புகள்: சென்னை சென்ட்ரல் அரக்கோணம் ரயில் பாதை வழித்தடத்தில் அமைந்துள்ள திருவள்ளூரில் வீரராகவப் பெருமாள் ஆலயம் கோவில் உள்ளது. இந்த கோயில் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற கூறப்படும் இக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது.

ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோவிலில் வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காணப்படும் வகையில் காணப்படுகிறார். மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.

மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கனகவல்லி தாயார் சந்நிதி அருகில் ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜாச்சாரியார், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

இக்கோவிலில் இடம்பெற்றுள்ள சாலி கோத்திர மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை வழிபாட்டுக்கு உகந்ததாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் சிறந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தலத்துப் பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் ஒன்பது கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கி பாவமகளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. இது தவிரப் பிரம்மோற்சவம், சித்திரை உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டுத் தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தவச்சத பெருமாளுக்கும் கண்ண மங்கை தாயாருக்கும் தினசரி ஆறு கால பூஜை பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.




Tags

Next Story
ai solutions for small business