குடிநீரில் குப்பை இறைச்சி கழிவுகள்: நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்

குடிநீரில் குப்பை இறைச்சி கழிவுகள்: நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்
X

ஏரியின் அருகே கொட்டிவைத்துள்ள குப்பைகள். 

பெரியபாளையம் அருகே குடிநீர் ஏரியில் குப்பை கழுவுங்கள் கொட்டுவதால் துர்நாற்றத்தால் தண்ணீர் மாசு அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த குமாரபேட்டை ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மக்கள் குடிநீர் தேவைக்காக அஞ்சாத்தம்மன் கோவில் அருகே சுமார் 30. ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது.

இந்த ஏரியை சுற்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் இந்த ஏரியில் திருப்பி விடப்பட்டு சேமிக்கப்பட்டு குடிநீருக்காக ஏரியின் சுற்றி 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பைப்புகள் மூலம் குமார பேட்டை பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

குமரப்பேட்டை அஞ்சாத அம்மன் கோவில் அருகே உள்ள குடியிருப்புகளில் மற்றும் ஹோட்டல்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து ஏரியின் அருகே கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு இந்த தண்ணீரில் கலந்து மாசு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

எனவே இதனை ஊராட்சி நிர்வாகம் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க