புழல் சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
பைல் படம்
புழல் சிறைக் கைதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி மீண்டும் சிறைக்கு திரும்பிய போது ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கொத்தவால்சாவடியை சேர்ந்த மினர்வா அஜீத் போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னை வடக்கு கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைப்பதற்காக போலீசார் மினர்வா அஜீத்தை அழைத்து வந்தனர்.
அப்போது சிறை காவலர்கள் முழு பரிசோதனை செய்தபோது விசாரணை கைதி மினர்வா அஜீத் ஆசனவாயில் மறைத்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 5கிராம் கஞ்சாவை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புழல் சிறை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புழல் போலீசார் 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று கஞ்சா கடத்தல் சம்பவங்கள் செல்போன் பறிமுதல்கள் புழல் சிறையில் நாளுக்கு நாள் அதிகரித்து குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu