5 வருடமாக காதலித்து ஏமாற்றம்: எஸ்பி., அலுவலகத்தில் பெண் புகார்

5 வருடமாக காதலித்து ஏமாற்றம்: எஸ்பி., அலுவலகத்தில் பெண் புகார்
X
எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த நிவேதா.
திருவள்ளூர் அருகே திருமண ஆசை வார்த்தை கூறி 5 வருடமாக காதலித்து ஏமாற்றியதாக எஸ்பி., அலுவலகத்தில் பெண் புகாரளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி என்பவரது மகன் முருகன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் நிவேதா, (23) என்பவரை 5 வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகன் என்பவர்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற அவசர வேலை நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் முருகனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன் நம்பரை டெலிட் பண்ணி விடுமாறு தெரிவித்துள்ளார்.

தான் ஏமாந்ததை அறிந்த நிவேதா, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அவருக்கு சிஎஸ்ஆர் கூட போட்டு கொடுக்கவில்லை. ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் எனது குடும்பத்தினருடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை இன்று அளித்துள்ளார்.

மேலும் தான் ஏழை வீட்டு பெண் என்பதால் தன்னை ஐந்து வருடங்களாக காதலித்து என்னை ஏமாற்றி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்