ஆதவா அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சீருடை
Uniform For School Students- திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு சுமார் 100 மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் பள்ளியிலேயே தையல்க்காரரை வரவழைத்து அளவெடுத்து மாணவர்கள் விருப்பம்போல் முக்கால் பேண்ட் அணிந்து வருவதை தடுக்கும் விதமாக தைத்து தருவதற்கும் அதேபோன்று 1ம் வகுப்பு 10ம் வகுப்பு பள்ளி வளாகத்திலேயே மாணவர்களிள் தேவையற்ற முடி அமைப்பை ஒழிக்க ஒரே சீரான (போலிஸ் கட்டிங்) முடித்திருத்தம் செய்ய பேருதவி செய்யும் பொருட்டு ஆதவா அறக்கட்டளை நிறுவனர் மதிப்புமிகு பால குமரேசன் அவர்கள் கருணை உள்ளம் கொண்டு மாணவர்களுக்கான அனைத்து உதவிகளையும் நானே செய்வதாக அறிவித்து பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் முதல் கட்டமாக ரூ. 50,000/- கான காசோலையை தலைமையாசிரியை ராஜம்மா அவர்களிடம் வழங்கினார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.பூபாலமுருகன், விழா ஏற்பாடு மற்றும் வரவேற்புரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் , முன்னிலை உதவி தலைமையாசிரியை பாகிரதி சாரதி, தமிழாசிரியர் கோபிநாத், சீலா , சிறப்புரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆர்.கருணாகரன், வி.எம்.சுகுனா, கி.சூர்யபிரகாஷ், ஜீ.அலெக்ஸ், ஜீவா, ஆசிரியர்கள், மகாலட்சுமி, லதா, கலியபெருமாள், மரிய சுந்தரி, பூங்கோதை, சத்துணவு அமைப்பாளர் கவிதா மற்றும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர் முடிவில் தமிழாசிரியர் பாஸ்கரன் நன்றி தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu