மாளந்தூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருவள்ளூர் அருகே மாளந்தூர் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாமை ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் ஊராட்சியில் சின்மயா கிராம மேம்பாட்டு மற்றும் சங்கரா நேத்ராலயா மாளந்தூர் ஊராட்சி நிர்வாகம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அருகே உள்ள இ சேவா மைய கட்டிடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் தலைமையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து முகாமை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பு இயக்குனர் பிரியா அருணாச்சலம், சென்னங்கரணி ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் காட்டையின், சமூக சேவகி பிரபாவதி, கலந்து கொண்டனர்.
இதில் டாக்டர் ரஹீமா, ஜனனி ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு மாளந்தூர் கிராமம் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள ஆவாஜி பேட்டை ஏனம்பாக்கம், நாயுடு குப்பம், திடீர் நகர், கல்பட்டு, கிறக்கம்பாக்கம், உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு கண்புரை கண்ணில் நீர் வடிதல் துரை கிட்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்து கொண்டனர்.
இதில் 90 பேருக்கு மூக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. பின்ன நோயாளிகளுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் சன்னாங்கரணி ஊராட்சி செயலாளர் சற்குணம், மற்றும் சின்மயா கிராமம் மேம்பாட்டு அமைப்பின் களப்பணியாளர்கள் செந்தில்குமார்,காயத்ரி, கங்கா கௌரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu