அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்
மீண்டும் மழலை பருவம் முதல் பள்ளி பருவங்களை கடந்து வரவேண்டும் என்பது போன்ற ஆசைகள் ஏற்படும் அளவிற்கு தமிழக முதல்வரின் திட்டங்கள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பெருமிதம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மிட்டணமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தண்டுரை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆவடி விஜயந்தா மேல்நிலை அரசு உதவி பெரும் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் சிறப்புரை ஆற்றியதுடன் 457 பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர் நாசர், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்க 305.கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கியுள்ளார்.
தற்போது நடைபெறும் ஆட்சி காலத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை கண்டு பொறாமை கொள்வதும், மீண்டும் மழலை பருவம் முதல் பள்ளி பருவங்களை கடந்த வரவேண்டும் என்பது போன்ற ஆசைகள் ஏற்படும் அளவிற்கு தமிழக முதல்வரின் திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், பகுதிச் செயலாளர்கள் ஜி.நாராயண பிரசாத், பொன்.விஜயன்,மண்டல குழு தலைவர் ஜோதிலட்சுமி, கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu