புழல் சிறையில் வெளிநாட்டு கைதி உயிரிழப்பு

புழல் சிறையில் வெளிநாட்டு கைதி உயிரிழப்பு
X

புழல் சிறை.

புழல் சிறையில் வெளிநாட்டு கைதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் சிறையில் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் அடைக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த விசாரணை கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முகமது ஆலம் ஷேக் (45) என்பவர் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் கடந்த மாதம் 16ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை முகமது ஆலிம் ஷேக் மயங்கி விழுந்த நிலையில் அவரை சிறை காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!