/* */

நேரடியாக வங்கிக் கணக்கில் வெள்ள நிவாரணம்: பாஜக மாநில துணைத்தலைவர்

திருவள்ளூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நேரடியாக வங்கிக் கணக்கில் வெள்ள நிவாரணம்: பாஜக மாநில துணைத்தலைவர்
X

பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெரிய மாற்றம் வரயிருப்பதாகவும், வெள்ள நிவாரண தொகையை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்க வேண்டும் என்றும் பாஜக மாநில துணை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் பட்டியலை மக்களுக்கு தெரிவிக்கும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்வு மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சி என்று கூறிக்கொண்டு தொடர்ந்து ஆட்சியில் இருந்து கொண்டே நாட்டை ஊழல் மிகுந்த நாடாக காங்கிரஸ் கட்சி மாற்றி அமைத்தது.

நாட்டின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக, ஆபத்தாக ஊழல் இருப்பதாகவும் அந்த ஊழலை ஒழிப்பதும் காங்கிரஸ் ஒழிப்பது ஒன்றுதான். தமிழ்நாட்டில் கூட பூதக்கண்ணாடியை வைத்து தேடக்கூடிய ‌கட்சியாக காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும் இவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தேவையில்லாமல் உயிர் கொடுத்து காப்பாற்றி வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை யாரோவது மக்களோடு நின்றிருப்பார்களா? ஆனால் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அடிமட்ட தொண்டர்கள் முதல் மக்களோடு மக்களாக சேர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை ரேஷன் கடைகளில் மக்களுக்கு ரொக்கமாக நிவாரண உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். டோக்கன் மூலமாகவும், கட்சி பிரதிநிதிகள் மூலமாகவும் பணம் வழங்கினால் பொதுமக்களை அளக்கழிக்க கூடும் அது வேலைக்கு ஆகாது என்றும் பாரத பிரதமர் நாடுமுழுக்க இருக்கும் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் ஆண்டுக்கு 20, ஆயிரம் கோடி ரூபாய் ஒரு நிமிடத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது.

அதேபோல் தமிழக அரசு வெள்ள நிவாரண தொகையை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய மாற்றமும், அமைதிபுரட்சி வரயிருப்பதாகவும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.

Updated On: 12 Dec 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்