பேருந்து இயக்கும்போது ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு..!

பேருந்து இயக்கும்போது ஓட்டுனருக்கு  வலிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு..!
X

உயிரிழந்த ஓட்டுநர் ஹேமநாதன்.(பழைய படம்)

திருவள்ளூர் அருகே பேருந்து ஓட்டுனருக்கு பேருந்தை இயக்கும்போது வலிப்பு ஏற்பட்டு மருத்துமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் முதல் பென்னாலூர்பேட்டை செல்லும் தடம் எண் 41 என்ற அரசு பேருந்தை நேற்றைய தினம் மதியம் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு பென்னாலுர்பேட்டை நோக்கி ஓட்டுனர் ஹேமநாதன் (வயது30) பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது பூண்டி அடுத்த வெள்ளத்துக்கோட்டை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஹேமநாதனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்தை ஓட்ட முடியாமல் தடுமாறிய அவர் விபத்து ஏற்படாமல் பயணிகளைக் காப்பாற்றும் வகையில் நிறுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் பேருந்தை ஒட்டியவாறு அவர் மயங்கி விழுந்தார். பேருந்து சாலை அருகில் இருந்த கல்வெட்டு மீது மோதி நின்றுவிட்டது. அதைத்தொடர்ந்து பயணிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அவரை திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ஷடவசமாக பயணிகள் யாருக்கும் எந்த விபரீதமும் ஏற்படவில்லை.

Tags

Next Story
ai in future agriculture