மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.
X

கடல் சீற்றம் - கோப்புப்படம் 

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பழவேற்காடு உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மீனவர்களின் படகுகள், மீன்பிடி கலன்கள், வலைகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?