விவசாயின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

விவசாயின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
X
பெரியபாளையம் அருகே விவசாயின் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் 3.லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது

பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த சுமார் 40 பவுன் தங்க நகை,3 லட்சம் ரொக்கம்,4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அத்தங்கி காவனூர் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி தயாளன்(56). இவரது மனைவி சரஸ்வதி (48). இவர்களுக்கு சரவணன், மற்றும் பரந்தாமன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சரவணன் குடும்பத்துடன் வேலை நிமித்தமாக செங்குன்றத்தில் வசித்து வருகிறார்.

இரண்டாவது மகன் சென்னை கப்பல் துறைமுகத்தில் பணியாற்றி குடும்பத்துடன் திருநின்றவூர் பகுதியில் வசித்து வருகின்றனர். தயாளன் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் தயாளனுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கையின் தோள்பட்டை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோத னைக்காக சென்றிருந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து இரவு செங்குன்றத்தில் வசிக்கும் தனது மூத்த மகன் சரவணன் வீட்டிற்கு சென்று இரவு தங்கி விட்டு மறுநாள் காலை 11 மணி அளவில் தனது வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 40 சவரன் தங்க நகை, விவசாயம் தேவைகளுக்காக வைத்திருந்த 3.லட்சம் ரொக்கம், பூஜை அறையில் இருந்த 4 கிலோ வெள்ளி பொருட்கள், கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து விவசாயி தயாளன் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் துறை கண்காணிப்பாளர் கனேஷ்குமார், வெங்கல் காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ராக்சி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதை விதமாக ஒரு ஆண்டிற்கு முன்பு இதே பகுதியில் வசிக்கும் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பா என்பவர் வீட்டிலும், ஆறு மாதத்திற்கு பிறகு சந்திரசேகர் என்பவர் வீட்டிலும், அசோக் பிள்ளை என்பவர் வீட்டிலும் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கையில் இது போன்று சம்பவங்கள் இதே பஜனை கோவில் தெருவில் தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தும் வழக்கு பதிவு செய்து தற்போது வரை குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்காமல் திணறி வருவதாகவும், இரவு நேரங்களில் போலீசார் யாரும் ஊருக்குள் ரோந்து பணிக்கு வருவதில்லை என்றும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே கிராமத்திற்குள் போலீசார் ரோந்து பணிக்கு வர வேண்டும் என கோரிக்கை குறித்துள்ளனர். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் விவசாயி ஒருவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.



Tags

Next Story
ai solutions for small business