கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் தின பேரணி பொதுக்கூட்டம்..!
உழவர்தின பேரணி
திருவள்ளூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உழவர் தினபேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கடந்த 1970 முதல் 1980 வரை நடந்த இலவச மின்சாரத் தேவைக்காக போராடி துப்பாக்கி குண்டுக்கு பலியாகி உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில்,பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டமானது திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகில் மேளதாளங்களுடன் தொடங்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியமாநில தலைவர் வேணுகோபால்,கூறுகையில்,நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும்,கரும்பு டன்னுக்கு ரூபாய் 5 ஆயிரம், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 200 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும்,
தமிழக முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மெத்தனப் போக்கு இவற்றின் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு போதுமான நிதி ஒதுக்கி தமிழக அரசு வரும் அரவை பருவத்திலேயே புதுப்பிக்க வேண்டும். தமிழக அரசுகொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஐ ரத்து செய்ய வேண்டும்.வேலூர்மாவட்டத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும்
விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விவசாயிகளே கொல்ல அனுமதி வழங்க வேண்டும். விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது நிலத்திற்கான இழப்பீட்டு சந்தை மதிப்பை விட 10 மடங்கு வழங்குவதோடு, ஆயுட்கால நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் எனவும்அவர் தெரிவித்தார்.இதில்மாநில பொதுச்செயலாளர் உதயகுமார், மாநில துணைத் தலைவர். சீமாபுரம் வாசுதேவ நாயுடு,மாநில இளைஞரணி தலைவர் சுபாஸ், மாநில துணைத்தலைவர் அரிமூர்த்தி, ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu