ஒர்க்காடு ஊராட்சியில் ஆக்கிரமித்த இடத்தை மீட்டுத் தரக்கோரி முற்றுகை..!

ஒர்க்காடு ஊராட்சியில் ஆக்கிரமித்த இடத்தை மீட்டுத் தரக்கோரி முற்றுகை..!
X

கோப்பு படம் 

ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாடு, இடுகாடு இடத்தை மீட்டுத் தரக்கோரி இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி அருகே ஒரக்காடு கிராமத்தில் இருளர் மற்றும் நரிக்குறவர்களு்ககான சுடுகாடு, இடுகாட்டை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நரிக்குறவர்கள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இருளர் மற்றும் நரிக்குறவர் இன மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த ஒரக்காடு கிராமத்தில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டை இருளர் மற்றும் நரிக்குறவர்கள் இறந்தால் நல்லடக்கமும், தகனமும் செய்ய கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில். இந்த இடுகாடு மற்றும் சுடுகாடுக்கு அருகில் நிலம் வாங்கியிருப்பவர்கள் சட்ட விரோதமாக கடந்த 12.2.24 அன்று ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டமாக்கி தங்கள் நிலத்துடன் சேர்ந்து வேலி அமைத்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து ஏற்கனவே பொன்னேரி வட்டாட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள் தெரிவிக்கையில் தாங்கள் நாடோடிகளாக இருக்கும் பட்சத்தில் தாங்களுக்கு அரசு வழங்கிய இடங்களை ஆக்கிரமிப்பு செய்த நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஊராட்சி, வருவாய் துறையிடமும், பொன்னேரி வட்டாட்சியிடம் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தும் மனு அளித்தும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு அதிகாரிகளும் துணை போகிறார்கள். எனவே தற்போது நாங்கள் அளித்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நரிக்குறவர்கள், இருளர்களாகிய நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே குடியிருப்போம் என தெரிவித்தனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்