/* */

பட்டா கத்தியுடன் பொதுமக்களை விரட்டிய போதை ஆசாமிகள் : சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த இளைஞர்கள்

திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் ஆட்டோவில் வந்த 4 கஞ்சா போதை ஆசாமிகள், சாலையோர சுவற்றின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர், விசாரிக்க சென்றவர்களை பட்டா கத்தியுடன் விரட்டினர், கிராமத்து இளைஞர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

பட்டா கத்தியுடன் பொதுமக்களை விரட்டிய போதை ஆசாமிகள் : சுற்றிவளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த இளைஞர்கள்
X

திருவள்ளூர் அருகே  பட்டா கத்தியுடன் போதை ஆசாமிகள் வந்த ஆட்டோ

சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கி ஒன்று வந்து கொண்டிருந்தது தொழுவூர் என்ற பகுதியில் வந்தபோது சாலையோரத்தில் உள்ள காம்பவுண்ட் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உதவி செய்ய ஆட்டோ அருகே சென்றனர். ஆட்டோவில் இருந்த கஞ்சா போதை ஆசாமிகள் பொதுமக்களை பட்டா கத்தியைக் கொண்டு விரட்டியுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போததை ஆசாமிகள் 4 பேரையம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி அமரவைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர்கள் கரையான்சாவடி பகுதியை சேர்ந்த புவனேஸ்வர், வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த செல்வம், ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஐயப்பன் என்பதுதெரியவந்தது.

இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பட்டா கத்தியுடன் வந்த நான்கு இளைஞர்கள் எதற்காக வந்தார்கள், யாரையாவது கொலை செய்ய வந்தார்களா அல்லது வழிப்பறி செய்ய வந்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Jun 2021 6:32 PM GMT

Related News