திருவள்ளூர் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்..!
திமுக பொது உறுப்பினர் கூட்டம்.
கட்சி தலைவருக்கும், தொண்டர்களுக்கும் ஒரு தபால்காரனாக செயல் பட்டு வருவதாக திருவள்ளூர் அருகே நடைபெற்ற பொது உறுப்பினர் கூட்டத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மூ.நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம் பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பிரேம் ஆனந்த் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான ஆவடி சா.மூ.நாசர் மற்றும் பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய சா.மு.நாசர் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும். தொடர்ந்து கட்சியில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதும் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து மாவட்டச் செயலாளர் என்கிற திமிரு, அகங்காரம், எனக்கு எப்பொழுதும் இருந்ததே இல்லை என்றும் ஒரு தபால்காரரை போல தான் நான் செயல்படுகிறேன் என்றும் கட்சி தலைமை சொல்வதை தொண்டர்களிடம் சொல்லுவேன்.
உங்களின் கோரிக்கைகளை தலைமையிடம் சொல்லுவேன், சில நேரங்களில் பணிகள் சம்பந்தமாக வருத்தப்பட்டு பேசுவேன் பின்னர் தோளில் கை போட்டு அரவணைப்பேன். தலைமை இடுகின்ற பணியை எந்த பணியாக இருந்தாலும் முதன்மையாக இருந்து பணியாற்றுவேன் கடந்த 43 ஆண்டுகளாக தலைவர் மு க ஸ்டாலின் கண் பார்வைக்கு ஏற்றார் போல் செயல்படுகிறேன். 43 ஆண்டுகள் விசுவாசியாக அவர்களின் காலடி ஏந்தி அவருடன் பயணித்தது போதும்.
இனிமே இந்த பதவியில் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, அதன் பிறகு நீங்கள் எல்லாரும் தயாராக இருங்கள், இளைஞர்களுக்காக நான் பதவியை விட்டுக் கொடுத்து ஒதுங்கத் தயார். நீங்கள் உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற தாரக மந்திரத்தில் ஏற்றி உழைத்தால் பதவி உயர்வு நிச்சயம். சாதாரண செயற்குழு உறுப்பினராக இருந்த நமது தலைவர் மு க ஸ்டாலின் தற்பொழுது உயர்ந்த பதவியை தனது உழைப்பின் காரணமாக அடைந்துள்ளார்.
என்றும் தொண்டர்கள் உழைப்பை மூலதனமாக கொடுத்தால் வட்டச் செயலாளர் நகரச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விரைவில் அடையலாம் நம்முடைய இளைஞர்கள் தவறான முறையில் சினிமாக்காரர்கள் பின்னாடி செல்வதை தடுக்க வேண்டும், பாடி பாடி வீணாப்போவதைவிட கொள்கை திராவிட கழகத்தில் தன்னை ஈர்த்துக் கொள்ள, தடம் புரளாமல் சினிமாவில் தோற்றவர்கள் எல்லாம் தற்போது அரசியலுக்குள் வந்துவிட்டனர், என சூசகமாக நடிகர் விஜய்யை முன்னாள் அமைச்சர் சா.மூ.நாசர் விமர்சித்தார். இதில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசுவாமி, காயத்ரி ஸ்ரீதரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu