/* */

லச்சிவாக்கத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

ஊத்துக்கோட்டை அருகே லச்சிவாக்கத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

லச்சிவாக்கத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
X

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் லச்சிவாக்கம் கிராமத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

ஊத்துக்கோட்டை அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் - 2024 , எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் லச்சிவாக்கம் கிராமத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ. மூர்த்தி தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி , மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.பி. ரவிக்குமார், அவைத்தலைவர் ரவிச்சந்திரன் , ஆதிதிராவிட நலக்குழு சம்பத், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும்,
மேலும் முதல்வரின் சாதனைகள் குறித்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் மூலம் தெரிவிப்பது என பல்வேறு தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட , ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் வக்கில்கள் சீனிவாசன் , முனுசாமி , கார்த்திகேயன் , பனப்பாக்கம் ராஜேஷ், விஜயபிரசாத், முகம்மது மொய்தீன், சிவாஜி, ஜமுனா அப்புன், சிவசங்கர், ஜெ.வேலு, டில்லிசங்கர் , வடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Updated On: 28 March 2024 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  4. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  5. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!