காலை சிற்றுண்டியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்
காலை சிற்றுண்டியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்
காலை உணவு திட்டம் போல் மதிய உணவு திட்டமும் பல வகையான உணவுகளுடன் மேம்படுத்தப்படும் என திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தா பிரபுசங்கர் கூறினார்.
திங்கட்கிழமை மாலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற தா பிரபு சங்கர் செவ்வாய்க்கிழமை காலை திருவள்ளூர் நகராட்சி பள்ளி ஆன சத்தியமூர்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி உணவை சாப்பிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது,தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
அதேபோல் மதிய உணவு திட்டமும் பல வகையான உணவுகளுடன் மேம்படுத்தப்படும்.இப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் அடிப்படை வசதிகளை சில கோரிக்கைகளை வைத்துள்ளனர் இது குறித்து ஆய்வு செய்து பின்னர் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார் ஆட்சியர். இந்நிகழ்ச்சியின் போது கூடுதல் ஆட்சியர் சுப புத்திரா மற்றும் பழைய தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu