திருவள்ளூர் ஜமாபந்தியில் 235 பேருக்கு பட்டா, ஜாதிச் சான்று வழங்கல்
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 235 பேருக்கு பட்டா, ஜாதிrf சான்றிதழ்களை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1433-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நடத்திடவும் கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் வருவாய் தீர்வாய் அலுவலர்கள் நிர்ணயம் செய்தும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அளித்த உத்தரவின் பெயரில் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது.
அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் மனுக்களை பெற்று வந்தனர்.
கடந்த 7-ஆம் தேதி முதல் நேற்று 27-ம்தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 987 மனுக்கள் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜமாபந்தி நிறைவு விழாவானது திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ் துணை வட்டாட்சியர்கள் கலைச்செல்வி, சந்திரசேகர், அம்பிகா, ஆதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கோட்டாட்சியர் கற்பகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 75 நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா, 93 பேருக்கு உட்பிரிவு பட்டா, 42 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ், 18 பேருக்கு கிராம நத்தம் பட்டா மற்றும் 7 பேருக்கு ஜாதி சான்றிதழ் ஆகியவற்றையும் வழங்கினார்.
மேலும் பட்டா மற்றும் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மீதமுள்ள நபர்களுக்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தெரிவித்தார்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணன், சேகர், புல்லரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன்,சேலை ஊராட்சி மன்ற தலைவர் கோவர்த்தனன் கரிக்கலவாக்கம் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu